நல்ல நூல்கள் நல்ல நண்பர்கள்

காவ்யாவைப் பற்றி...

1981-ல் பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் மகள் காவ்யா பெயரில் அவளது முதல் பிறந்த நாளன்று 'காவ்யா' உருவாக்கப்பட்டது. 'நல்ல நூல்கள் நல்ல நண்பர்கள்' என்கிற எண்ணத்தில் கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், திரைப்படம், ஆய்வுகள், விமர்சனங்கள் என இதுவரை 1000 க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. க.நா.சு.வின் 'இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்' என்ற நூல் 1986-ல் தில்லி சாகித்ய அகாதெமி பரிசைப் பெற்றது. இதைத்தவிர காவ்யா இதுவரை 100 க்கும் மேற்பட்ட விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளது. இலக்கியத் தடங்கள், வட்டாரச் சிறுகதைகள், தொகுப்புகள், அறிஞர்களின் கட்டுரைக் களஞ்சியம், நாட்டுப்புறவியல், தெய்வங்கள் தொகுப்புகள், மொழி பெயர்ப்புகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

மேலும்...